ஐரோப்பாவில் ‘monkeypox’ காய்ச்சலால் முதல் மரணம் ஸ்பெயினில் பதிவு!

0
148
Article Top Ad

மங்கிபோக்ஸ் (monkeypox) காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பாவின் முதல் மரணம் ஸ்பெயினில் பதிவாங்கியுள்ளது.

மங்கிபோக்ஸ் அலையில் ஆப்பிரிக்காவுக்கு வெளியே முதல் மரணம் பிரேசிலில் கடந்த வெள்ளிக்கிழமை முன்னதாக பதிவான நிலையில் தற்போது ஐரோப்பாவின் முதல் மரணம் ஸ்பெயினில் பதிவாங்கியுள்ளது.

ஜூலை 22 முதல் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, உலகம் முழுவதும் ஐந்து இறப்புகள் பதிவாகியுள்ளன. அவை அனைத்தும் ஆப்பிரிக்காவில்.

கடந்த சனிக்கிழமை WHO வேகமாகப் பரவி வரும் மங்கிபோக்ஸ் காரணமாக உலகளாவிய சுகாதார அவசரநிலையை அறிவித்தது.

ஸ்பெயின் சுகாதார அமைச்சகம் நாட்டில் 4,298 தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 64 பேர் பெண்கள் என்றும் கூறியுள்ளது.

3,750 நோயாளிகளில் 120 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் இறந்துவிட்டதாகவும் கூறியுள்ளது.

Source: The Guardian