இந்தியாவில் பதிவானது முதலாவது Monkeypox மரணம்!

0
100
Article Top Ad

உலகம் முழுவதும் Monkeypox காய்ச்சலின் பாதிப்புகள் அதிகரித்துவரும் நிலையில், இந்தியாவில் Monkeypox நோய்த்தொற்றுடன் தொடர்புடைய முதல் மரணம் பதிவாகியுள்ளது.

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் மத்திய கிழக்கு நாட்டிலிருந்து பயணம் செய்த 22 வயது இளைஞர் ஒருவர் Monkeypox அறிகுறிகளுடன் உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்தைத் தொடர்பில் விசாரணைகள் மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர் இந்தியா வந்த பிறகு தொடர்பில் இருந்தவர்களை மாநில சுகாதாரத் துறை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தவும் கண்காணிக்கவும் செய்துள்ளது.

திருச்சூரில் உள்ள புண்ணியூரைச் சேர்ந்த 22 வயது இளைஞர், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து திரும்பிய சில நாட்களின் பின்னரே Monkeypox உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.