100 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கைக்கு முதல் வெங்கலப் பதக்கம்

0
304
Article Top Ad

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப்போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் எதிர்ப்பார்ப்பான யுபுன் அபேகோன் வெங்கலப் பதக்கத்தை வென்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

போட்டித் தூரத்தை 10.14 விநாடிகளில் கடந்து அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதற்கமைய, பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை அணி வீரர் ஒருவர் 100 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் வெங்கலப் பதக்கம் வென்ற முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஆண்களுக்கான வட்டு எறிதல் பாரா தட கள விளையாட்டு போட்டியில் கலந்த கொண்ட இலங்கை வீரர் பாலித பண்டார வௌ்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.