அவுஸ்திரேலியா குயின்ஸ்லாந்தில் வசிக்கும் இலங்கை தமிழ்க் குடும்பமான நடேசலிங்கம் குடும்பத்திற்கு அந்நாட்டு அரசாங்கம் நிரந்தர வீசாவை வழங்கியுள்ளது.
நடேசலிங்கத்தின் வீட்டுக்கு இன்று சென்ற அதிகாரிகள் இது தொடர்பில் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2018 ஆம் ஆண்டில் இவர்கள் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த போது, சட்டவிரோமாக இவர்கள் தங்கியுள்ளதாக தெரிவித்து இவர்களை கைது செய்த அதிகாரிகள் மெல்போர்ன் தடுப்பு முகாமுக்கு இவர்களை அனுப்பி வைத்திருந்தனர்.
இதன் பின்னர் பல்வேறு போராட்டங்களின் பின்னரும், பிள்ளையொன்றின் சிகிச்சை நடவடிக்கைகளை கருத்திற்கொண்டும் தற்காலிக வீசாவை வழங்க அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்நிலையில் தற்போது அவர்களுக்கு நிரந்தர வீசாவை வழங்க அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை, அவர்களுக்காக போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.