திருச்சிற்றம்பலம் படம் வெற்றியா தோல்வியா?

0
98
Article Top Ad

திருச்சிற்றம்பலம் படத்தின் ரிசல்ட்டை சன் பிக்சர்ஸ் மூன்றாம் நாளே அறிவித்து இருக்கிறது.

மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ், ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் திருச்சிற்றம்பலம் கடந்த வியாழனன்று ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விமர்சகர்களும் ரசிகர்களும் படத்தை பாராட்டி வருகின்றனர். மேலும் இரண்டாம் நாளிலும் படம் 13 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் படத்தின் வசூலை பார்த்துவிட்டு தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ட்விட்டரில் ரிசல்ட்டை அறிவித்து இருக்கின்றனர்.

“Namma Pazham jeichuttaan???? It’s Blockbuster hit” என சன் பிக்சர்ஸ் ட்விட்டரில் அறிவித்து இருக்கின்றனர். அதற்கு தனுஷ் ஹார்டிங் எமோஜியை பதிவிட்டு ரீடிவீட் செய்திருக்கிறார்.