அஜித்தை பின்னுக்கு தள்ளிய ரோலக்ஸ்!

0
110
Article Top Ad

விக்ரம் படத்தின் ரிலீசுக்கு பிறகு Popular actors லிஸ்டில் அஜித்தை ஓவர்டேக் செய்து இருக்கிறார் சூர்யா.

சினிமாவில் நடிகர்கள் இடையே எப்போதும் போட்டி இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதிலும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் உள்ளிட்ட பல விஷயங்களுக்காக பல நேரங்களில் ரசிகர்கள் மத்தியில் கூட மோதல்கள் நடக்கும். நடிகர்களே ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்தால் கூட இந்த மோதல்கள் நிற்பதில்லை.

இந்நிலையில் இந்திய அளவில் அதிகம் பாப்புலர் ஆன நடிகர்கள் லிஸ்ட்டை ormax நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அதில் வழக்கம்போல விஜய் தான் முதலிடம் பிடித்து இருக்கிறார்.

ஜூலை மாதத்திற்கான அந்த ரேங்கிங்கில் நடிகர் சூர்யா அஜித்தை முந்தி இருக்கிறார். ஜூன் மாதத்தில் அஜித் 8ம் இடத்திலும், சூர்யா 10ம் இடத்திலும் இருந்தனர்.

ஆனால் ஜூலையில் சூர்யா 9ம் இடத்திலும், அஜித் 10ம் இடத்திலும் இருக்கின்றனர்.