மொத்தம் 208 இலங்கை விமானங்கள் இந்த ஆண்டு மே 27 முதல் எரிபொருள் நிரப்புவதற்காக திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ANI செய்தி நிறுவனத்தின் தகவல் படி, நான்கு விமானங்கள் எரிபொருள் நிரப்பும் நோக்கங்களுக்காக கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 20) கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
இவற்றில், அதிக எண்ணிக்கையிலான விமானங்கள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமானது. நேற்று வரை மொத்தமாக 130 ஸ்ரீலங்கன் விமான சேவைகள் திருவனந்தபுரத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமானங்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து மே 27 முதல் எரிபொருள் நிரப்பத் தொடங்கின.
– ANI செய்தி