2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தைத் தயாரிக்க ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!

0
89
Article Top Ad

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்க நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நீண்டகாலமாக அரச வருமானம் குறைந்து, அரச செலவினங்கள் அதிகரித்துள்ளமையால் ஏற்பட்டுள்ள அரச நிதிச் சமநிலையற்றதன்மை தற்போது தீவிரமான பொருளாதார நெருக்கடியாக மாறியுள்ளது. அதனுடன் தொடர்புடைய பொருளாதார சவால்களின் மத்தியில் 2023-2025 இடைக்கால வரவு செலவுச் சட்டகத்தில் 2023 ஆண்டுக்கான வரவு செலவைத் திட்டத்தைத் தயாரிக்கும் போது மிகவும் புத்திகூர்மையுடனும் மற்றும் மூலோபாய ரீதியான அணுகுமுறையுடனும் மேற்கொள்ளப்பட வேண்டியதுடன், நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிச் சூழல் மேலும் மோசமடையாமல் தடுத்தல் மற்றும் எதிர்கால நிலைபேற்றுத் தன்மைக்கு அடித்தளமிடும் வகையில் தயாரித்தல் வேண்டும்.

அதற்கமைய, 2023-2025 இடைக்கால வரவு செலவுச் சட்டகத்தில் அடைவதற்கு எதிர்பார்க்கப்படும் அரச நிதி இலக்குகளின் அடிப்படையில் தற்போது மொத்த தேசிய உற்பத்தியின் 9% வீதமாகவுள்ள அரச வருமானத்தை 11.3% வீதமாக அதிகரித்தல், 18.9% வீதமாகவுள்ள அரச செலவினங்களை 18.1% வீதமாகக் குறைத்தல், ஆரம்ப வரவு செலவு மீதி மறை 4% வீதத்திலிருந்து மறை 1% வீதத்திற்கு குறைத்தல் மற்றும் வரவு செலவு இடைவெளி மறை 9.9% வீதத்திலிருந்து 6.8% வீதமாகக் குறைத்தல் போன்ற இலக்குகளை 2023 ஆம் ஆண்டு வரவு செலவு மூலம் பூர்த்தி செய்து கொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு பூச்சிய அடிப்படையிலான (Zero – Based Budgeting) அடிப்படையில் தயாரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு மதிப்பீட்டைத் தயாரிப்பதற்கு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.