இலங்கைக்கான பெருவாரியான இந்திய உதவிகளைத் தொடர்வது நடைமுறைச்சாத்தியமற்றது: எச்சரிக்கை பேணல் அவசியம்

0
126
Article Top Ad

இலங்கைக்கான பெருவாரியான இந்திய உதவிகளைத் தொடர்வது நடைமுறைச்சாத்தியமற்றது: எச்சரிக்கை பேணல் அவசியம் -இலங்கை தொடர்பாக இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் முன்னாள் தூதுவர் சுட்டிக்காட்டிய விடயம்

இலங்கை விடயத்தில் இந்தியா எவ்வளவு அக்கறையோடு இருக்கின்றது என்பது கடந்தவாரம் இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் பங்கேற்றபோது அறிந்துகொள்ளமுடிந்தது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களோ அன்றேல் இலங்கையில் சீனா மேற்கொள்ளும் நகர்வுகளோ இந்தியாவிலுள்ள ஆய்வாளர்களால் எந்தளவிற்கு  தீவிரமாக அலசி ஆராயப்பட்டு இங்குள்ள பொருளாதார மற்றும் பாதுகாப்பு வல்லுனர்களைவிடவும் அதிகமாக ஆய்வு அறிவை ஆதாரங்களுடன் கொண்டிருக்கின்றனர் என்பதை உணர்ந்துகொள்ளமுடிந்தது.
இந்தியாவின் தலைநகர் புதுடில்லிக்கு வெளியே அமைந்திருக்கும் ஒரே சிந்தனைக் கூடமான (think-tank) சீனக் கற்கைகளுக்கான சென்னை நிலையத்தினால் {Chennai Centre for China Studies (C3S)} இந்த சர்வதேச மாநாடு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
இந்த மாநாட்டில் இலங்கைக்கான இந்தியத் தூதுவராக முன்பு பணியாற்றிய முன்னாள் இந்திய இராஜதந்திரி அசோக் காந்தா  முக்கியமான விடயமொன்றைப் பதிவுசெய்தார்.
 
பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டிருக்கும் இலங்கைக்கு இந்தியா 6 பில்லியன் அமெரிக்கடொலர்கள் பெறுமதியான நிவாரணப் பொதியை வழங்கியுள்ளது. இதுபோன்று பெருமளவிலான உதவியை இந்திய வேறெந்த நாட்டிற்கும் செய்த தில்லை. இருந்தபோதிலும் இதுபோன்ற பெருமளவிலான உதவிகயை இலங்கைக்கு தொடர்ந்தும் வழங்குவதும் நடைமுறைச்சாத்தியமற்றது.
இன்னமும் எந்தளவிற்கு நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா பொருளாதார உதவிகளை வழங்கமுடியும் எனக் கேள்வியெழுப்பினார்.  

 
இதற்கு மாற்றீடாக இந்தியா சர்வதேச சமூகத்தை ஒன்றுதிரட்டி சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை விரைவுபடுத்தும் நடவடிக்கையை விரைந்து முன்னெடுக்கவேண்டும் என யோசனை முன்வைத்தார்.
சீனக் கற்கைகளுக்காக சென்னை நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச மாநாட்டில் கருத்துவெளியிட்ட மேலும் கருத்துவெளியிட்ட அவர் சர்வதேச ரீதியிலும் பொருளாதார நிலை நம்பிக்கைதரக்கூடியதாக இல்லை.
40ற்கும் அதிகமான நாடுகள் கடுமையான கடன் சுமையை எதிர்கொண்டு  வங்குரோத்தாகும் விளிம்பு நிலையில் தொங்கிக்கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டார்.
 ‘ இலங்கையின் தற்போதைய நெருக்கடி புவிசார் அரசியல் சவால்கள் மற்றும்  முன்னோக்கியுள்ள வழிமுறை ‘ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் பேசிய அவர்  இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு வித்திட்ட காரணிகள் குறிப்பிட்ட காலமாக சூழமைக்கப்பட்டன எனவும்  2019ல் இடம்பெற்ற
ஈஸ்டர் தாக்குதல்கள் கொவிட் பெருந்தொற்று மிகமோசமான பொருளாதார முகாமைத்துவம் தகுதியற்றவர்களைக்கூட தெரிந்தவர்கள் உறவினர்கள் என்ற காரணத்தினால்  பதவிகளில் அமர்த்தல் ஊழல் போன்ற பல்வேறு காரணங்களின் கூட்டு விளைவாகவே இந்த நெருக்கடி இல்ங்கையில் ஏற்பட்டது என அவர் கூறினார்.
அரசியல் நெருக்கடியைப்பற்றிக் குறிப்பிட்ட முன்னாள் தூதுவர் அசோக் காந்தா  கடுமையான அரசியல் கொந்தளிப்பான காலப்பகுதி தற்போது ஸ்திரநிலையைக் கண்டுள்ளது போன்ற தோற்றப்பாடுள்ளது.
பிரபலமான அரகலய போராட்டம் முழுமையாக முடிவிற்கு வராத போதும் தற்போது அதன் வலிமையில் குன்றிவிட்டதாகத் தோன்றுகின்றது.  ஆளும் ராஜபக்ஸ குடும்பத்தின் அதிகாரபீடத்தில் இருந்து வெளியேறியதன் மூலம் முக்கியமான கோரிக்கை நிறைவேறியுள்ளது.
தற்போதைய நிலையில் ரணில் விக்கிரமசிங்கவை விட்டால் மாற்றுத் தெரிவுகள் ஏதுமில்லை. ராஜபக்ஸக்களுக்கான பௌத்த ஆதரவு குறைந்துள்ளது.  ராஜபக்ஸக்கள் தற்போது வீழ்ந்திருப்பது உண்மைதான் என்றாலும் அவர்கள் மீண்டும் வரமாட்டார்கள் என்று கூறிவிடமுடியாது.
இலங்கை தொடர்பில் இந்தியாவிற்கு காரணப்படும் கரிசனை பற்றி குறிப்பிட்ட அவர் வரலாற்று ரீதியான மற்றும் கலாசார ரீதியான இரு நாடுகளுக்குமுள்ள உறவுகளைக் கருத்தில் கொண்டு இலங்கைக்கு உதவவேண்டும் என்றே இந்திய விரும்பியது.  அதேவேளை  அரசியல் வெளியில் இருந்து தூர நின்று நாட்டிற்கு உதவுகின்ற நிலைப்பாட்டிலேயே இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர்  மேலும் குறிப்பிட்டார்.