இலங்கைக்கு ஜப்பான் உணவு நன்கொடை!

0
86
Article Top Ad

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜப்பான் அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்ட உணவு உதவியின் முதல் தவணை ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் (WFP) மூலம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் – கிட்டத்தட்ட 30 சதவீத மக்கள், உணவு நெருக்கடி காரணமாக மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளனர்.

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் Mizukoshi Hideaki, WFP பிரதிநிதி வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோவிடம் நன்கொடையை இன்று கையளித்தனர்.

இந்த முதல் தவணையில் அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் ஆகியவற்றை உள்ளடக்கிய உதவிகள் நன்கொடையின் ஒரு பகுதியாக வழங்கப்படுவதுடன் இது US$1.5 மில்லியன் மதிப்புடையது.

உதவிகளானது WFP ஆல் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள சுமார் 15,000 பேருக்கும் 380,000 பள்ளி மாணவர்களுக்கும் விநியோகிக்கப்படும்.