டொலரின் மதிப்பு 300 ரூபாய்வரை குறையலாம் ; அலி சப்ரி தெரிவிப்பு!

0
74
Article Top Ad

அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் எதிர்காலத்தில் 300 ரூபாவாக குறைவடையுமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பணம் அனுப்புதல் மற்றும் சர்வதேச நாணய நிதியம், ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் உலக வங்கி ஆகியவற்றில் இருந்து பெறப்படும் நிதிகளின் அதிகரிப்பால் இது சாத்தியமாகும் என்றார்.

திறந்த சந்தையை முற்றிலுமாக மூடும் நடவடிக்கையானது ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்தவும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கவும் உதவியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

“இது அரசாங்கத்துக்கு எரிபொருள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய உதவியதுடன் ரூபாயை மேலும் உறுதிப்படுத்துகிறது,” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.