பசில் மீதான பயணத்தடை நீக்கம்

0
117
Article Top Ad

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை இலங்கை உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நீக்கியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி வரை வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் பசில் ராஜபக்ச மற்றும் 05 பேருக்கு கடந்த ஜூலை மாதம் பயணத் தடை விதிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் முன்னாள் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோருக்கு இவ்வாறு பயண தடை விதிக்கப்பட்டது.