ஐ.தே.கவின் 76ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று!

0
92
Article Top Ad

ஐக்கிய தேசியக் கட்சியின் 76 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

“ஒன்றாய் எழுவோம்” எனும் தொனிப்பொருளில் இன்றைய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாலை 3.00 மணிக்கு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

நிறைவு விழா முன்னிட்டு கொழும்பில் உள்ள பல்வேறு மதஸ்தலங்களில் விசேட வழிகாடுகள் இடம்பெற்றன.

கொச்சிகடை சிவன் கோயில், கொச்சிகடை புனித அந்தோனியார் ஆலயம், கங்காராமை விகாரை உட்பட பல மதஸ்தலங்களில் விசேட வழிபாடுகளும் நடைபெறன.