நான் வழக்காடிய 53 பேரை கலவரத்தை சாட்டாக வைத்து கொன்றார்கள்- தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரஹாஸன் மனந்திறக்கிறார்

0
534
Article Top Ad

1983ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற கலவரம் என்பது அரசாங்கத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையாகுமென ஈழ அகதிகள் புனர்வாழ்வுக்கான அமைப்பினர் பிரதம செயல்பாட்டாளர் சி.எஸ்.சந்திரஹாசன் தெரிவித்தார்.இதன் போது பதவியிலிருந்த அரசாங்கத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரத்தின் போது தாம் வழக்காடிக் கொண்டிருந்த 53 பேரை சிறையில் வைத்துப் படுகொலைசெய்தனர் என சந்திரஹாஸன் சுட்டிக்காட்டினார்.

க்ளோப் தமிழ் இணையத்திற்கு வழங்கி விசேட நேர்காணலின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
1983ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற சம்பவத்தை கலவரமொன்று அரசாங்கம் தட்டிக்கழித்திருந்தாலும் அது அரசாங்கத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையாகும். அந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட நபராக நானும் உள்ளேன். பாதிக்கப்பட்ட பல இளைஞர்கள் சிறைவாசம் அனுபவித்தனர். சிலருக்கு வழக்குகள் தாக்கல் செய்யாமால் சிறைவாசத்தை அனுபவத்தினர். இவர்கள் தொடர்பில் நான வழக்காடல்களை செய்தேன்.
53 பேரை சிறையிலேயே படுகொலை செய்தனர். இவர்கள் அனைவர் சார்பிலும் நான்தான் வழக்காடல்களை முன்னெடுத்தேன். 53 பேரில் தங்கதுறை, குட்டிமணி, வைத்தியர் ராஜசுந்தரம் உள்ளிட்ட பலரும் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தை பார்வையிட அனுமதிகளை கோரினோம். ஆனால், சம்பவத்தை பார்வையிட அனுமதியளிக்கவில்லை.

இந்தப் போராட்டத்தை தொடர்ந்து இலங்கைக்குள் பணியை முன்னெடுக்க முடியாது என பலர் வெளிநாடுகளுக்குச் சென்றனர். நான் அப்போது தமிழ் நாட்டிலிருந்து பணிகளை தொடரலாமென வந்துவிட்டேன்.
வசதிப்படைத்தவர்களும் தொடர்புகள் இருந்தவர்களும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றனர். வசதியில்லாதவர்கள் பாக்கு நீரிணையை கடந்து தமிழகத்தை நோக்கி வந்து புகழிடத்தை பெற்றுக்கொண்டனர். தமிழகத்தை நோக்கி வந்தவர்களை தமிழக அன்போடு வரவேற்றது.

அகதிகளால் அகதிகளுக்கு ஒரு அமைப்பு என்ற அடிப்படையில் இங்கு ஒரு அமைப்பை உருவாக்கினோம். இதன் பின்னர் இந்த படுகொலையை சர்வதேச மயப்படுத்த வேண்டுமென எனது பணியை தொடங்கினேன். மூன்று மாதங்களில் பணியை முடித்துவிடலாமென ஆரம்பித்தேன் ஆனால், 40 ஆண்டுகள் கடந்தும் பணிகள் தொடர்கிறது.
இந்தப் பணியை முன்னெடுப்பதில் மாபெரும் மகிழ்;ச்சி உள்ளது. அதனால் தொடர்ந்து பணிகளை முன்னெடுத்து வருகிறேன் என்றார்.