நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் வகையில் தேசிய சபையொன்றை அமைப்பதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தேசிய சபையை அமைப்பதற்கான யோசனைகளை விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.
அதன்படி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தேசிய சபையின் தலைவராக செயல்படவுள்ளதுடன் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சபை முதல்வர், மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொரடா ஆகியோர் அதிகாரங்களை கொண்ட உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
அவர்களுக்கு மேலதிகமாக நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த சபையில் உள்ளடங்கவுள்ளனர். நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தேசிய சபையை அமைக்குமாறு சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தமையை கவனத்திற் கொண்டு இந்த தேசிய சபை அமைக்கப்படவுள்ளது.