ஆசிய சாம்பியன்கள் நாட்டை வந்தடைந்தனர்!

0
231
Article Top Ad

இலங்கை கிரிக்கட் அணியும், ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை வலைப்பந்தாட்ட அணியும் நாட்டை வந்தடைந்தனர்.

ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டியில் 6ஆவது தடவையாக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை வலைப்பந்தாட்ட அணி இன்று (13) அதிகாலை 12.50 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

வலைப்பந்தாட்ட அணியை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க வரவேற்றார்.

இதேவேளை, 6வது தடவையாக ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை 05 மணியளவில் இலங்கையை வந்தடைந்தது.

அவர்களை வரவேற்கும் வகையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட வைபவமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டை வந்தடைந்த விளையாட்டு வீரர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வாகன பேரணியில் கொழும்புக்கு அழைத்து வரப்படப்படுகின்றன.