சிறைகளில் முஸ்லிம்களிடம் மனிதாபிமானமற்ற முறையில் தேடுதல்

0
101
Article Top Ad

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடிய இளம் கவிஞர் ஒருவர் பொதுவாக கைதிகளுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட துஷ்பிரயோகங்கள் குறித்து வெளிப்படுத்தியுள்ளார்.

“தடுத்து வைக்கப்பட்டுள்ள உள்ள ஒருவரை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்து மீண்டும் சிறைக்கு கொண்டு வரும்போது, விசேட அதிரடிப்படை வீரர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அந்த நபர் முஸ்லிமாக இருந்தால், அவர்களை நிர்வாணமாக ஆடைகளை அவிழ்க்கச் சொல்லி, அவர்களின் ஆசனவாயில் ஒரு ஊசியைச் செருகி, விளக்கைப் போட்டு சோதனை செய்வார்கள்.”

தேசிய கைதிகள் தினத்திற்கு மறுநாள் ட்விட்டர் பதிவில் தமிழ் வாசகர் சமூகத்தின் மத்தியில் அறியப்பட்ட மன்னாரமுது அஹ்னாப் மற்றும் ஆசிரியர் அஹ்னாப் ஜசீம் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசிய கைதிகள் தினம் செப்டெம்பர் 12 அன்று அனுஷ்டிக்கப்பட்டது.

நவரசம் கவிதைத் தொகுப்பின் ஊடாக ‘தீவிரவாத சித்தாந்தங்களைப்’ வெளிப்படுத்தி தமது  மாணவர்களை ‘தீவிரவாத’ விடயங்களை பின்பற்றுபவர்களாக மாற்ற முயற்சித்த குற்றச்சாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு மே 16ஆம் திகதி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் 579 நாட்கள் சிறையில் இருந்தார்.

அவர் தற்போது நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார், ஆனால் இலங்கை அரசாங்கம் அவரை பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவராக  அண்மையில் பட்டியலிட்டுள்ளது.