கோத்தபாய ராஜபக்சவை பிரதமர் பதவியில் அமர்த்த முயற்சி?

0
213
Article Top Ad

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நாட்டின் பிரதமராக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று ஆர்வம் காட்டி வருவதாக அறியமுடிகிறது.

ஆனால், அதே கட்சியின் மற்றொரு குழு தினேஷ் குணவர்தன தொடர்ந்தும் பிரதமராக இருக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வது தொடர்பில் எவ்வித கருத்தையும் வெளியிட மாட்டார் எனவும், அவர் மீண்டும் அரசியலில் பிரவேசிப்பது தொடர்பில் எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை எனவும் அறிய முடிகிறது.