‘திரிபோஷவில் அஃப்ளொடோக்சின்கள்’ – கெஹலிய ரம்புக்வெல்ல விளக்கம்!

0
99
Article Top Ad

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷ சத்துணவில் அதிகளவு அஃப்ளொடோக்சின்கள் இருப்பதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன முன்வைத்த குற்றச்சாட்டை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நிராகரித்துள்ளார்.

பாராளுமன்றில் இந்த கருத்த அவர் வெளியிட்டார்.

புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் த்ரிபோஷாவில் அஃப்ளாடோக்சின் என்ற புற்றுநோய் ஏற்படுத்தும் மூலக்கூறு உள்ளதாக பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை.

திரிபோஷாவில் அஃப்லாடோக்சின் இல்லை. அவ்வாறு கூறிய சுகாதார அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷ சத்துணவில் அதிகளவு அஃப்ளொடோக்சின்கள் இருப்பதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.