பெண்களின் சுகாதார துவாய்களுக்கு விதிக்கப்படும் வரியை குறைக்க நடவடிக்கை!

0
84
Article Top Ad

பெண்களின் சுகாதார துவாய்களுக்காக விதிக்கப்படும் வரிகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற அரச வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான சபை ஒத்திவைப்பின் போது உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நாட்டில் மொத்த சனத் தொகையில் 52 வீதமானவர்கள் பெண்களாவர். அனைத்து பெண்களுக்கும் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் விடயமாக சுகாதார துவாய் விலைகள் அதிகரிக்கப்பட்டமை காணப்படுகிறது.

நான் அமைச்சுப் பதவியை ஏற்று இரண்டு நாட்களில் ஜனாதிபதியை சந்தித்து இந்த விடயம் தொடர்பில் கடிதமொன்றை கையளித்தேன்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு மத்தியில் பெண்களுக்கு அத்தியாவசியமான விடயமாக உள்ள சுகாதார துவாய்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதாகவும், இதனால் அவற்றின் விலைகளை குறைக்குமாறும் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டேன். அதன் பிரகாரம் வரிகளை குறைத்து சுகாதார பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என்றார்.