இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் விடுத்துள்ள அதிரடி உத்தரவு

0
87
Article Top Ad

யுக்ரேனில் போரிட மேலும் 3,00,000 பேர் அழைக்கப்படுவார்கள் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.

தற்போது ராணுவத்தில் பணியாற்றவில்லை என்றாலும், ஏற்கெனவே பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் யுக்ரேனில் போரிட அழைக்கப்படுவார்கள் என்று அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியுள்ளார்.

யுக்ரேனில் பணியாற்ற 3,00,000 பேர் அழைக்கப்படுவார்கள் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் சாய்கூ ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு முதல் முறையாக ராணுவ அணி திரட்டலுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். மேலும், “அணு ஆயுத அச்சுறுத்தல்” என்ற பெயரில் ரஷ்யா மீது மேற்குலக நாடுகளின் மிரட்டல் தொடர்ந்தால், மாஸ்கோ அதன் பரந்த ஆயுதக் குவியலின் வலிமையுடன் பதிலளிக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.