விறுவிறுப்பான இறுதி ஆட்டம் ; ஆஸியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

0
71
Article Top Ad

இந்தியா அவுஸ்ரேலியாவை அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டியில் இந்தியா அணி அபார வெற்றியை பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடியது. இதில் மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாக்பூரில் நடந்த மழை பாதிப்புக்குள்ளான 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்நிலையில், அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஆரோன் பின்ச் மற்றும் கேமரூன் கிரீன் களமிறங்கினர்.ஒருபுறம் பின்ச் நிதானத்தை கடைபிடிக்க, மறுபுறமோ கிரீன் பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டார். 19 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், 52 ரன்னில் அவுட்டானார். பின்ச் 7 ரன்னிலும், ஸ்டீவ் ஸ்மித் 9 ரன்னிலும், மேக்ஸ்வெல் 6 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அணியை டிம் டேவிட் சரிவில் இருந்து மீட்டார். அவரின் அரைசதத்தின் (54) உதவியுடன் ஆஸ்திரேலிய அணி நல்ல ஸ்கோரை எட்டியது. இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. ஆரம்ப இருவிக்கட்டுகளும் 23 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட நிலையில் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். அதிரடியாக ஆடிய சூரியகுமார் யாதவ் 69 ஓட்டங்களையும் இறுதிவரை களத்தில் ஆடிய கோலி 63 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர். ஆர்திக் பாண்டியா 25 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். 19.5 ஓவரில் இந்தியா அணி வெற்றி இலக்கை அடைந்தது.