ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்

0
72
Article Top Ad

கொழும்பு மாவட்டத்திற்குள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று சோசலிச வாலிபர் சங்கத்தின் செயற்பாட்டாளரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (23) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு மாவட்டத்தில் பல பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டிருந்தார்.

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் பிற அமைப்புகள் இந்த நடவடிக்கையை விமர்சித்தன, எதிர்ப்பு இயக்கங்கள் மற்றும் எதிர்ப்பாளர்களை நசுக்க அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய நிலையில் சோசலிச வாலிபர் சங்கத்தால் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற வளாகம், உச்ச நீதிமன்ற வளாகம், கொழும்பில் உயர் நீதிமன்ற வளாகம், கொழும்பில் நீதவான் நீதிமன்ற வளாகம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, இலங்கை கடற்படைத் தலைமையகம் மற்றும் பொலிஸ் தலைமையகம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை இராணுவத் தலைமையகம் அக்குரேகொட, இலங்கை விமானப்படை தலைமையகம், படைத் தலைமையகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகிய பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாக விரகடனப்படுத்தப்பட்டுள்ளன.