ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயங்களால் ; பலர் பதில் அமைச்சர்களாக நியமனம்!

0
116
Article Top Ad

ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சென்றுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று (26) அதிகாலை 12.50 மணியளவில் ஜனாதிபதி ஜப்பான் நோக்கிப் புறப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிக் கிரியைகள் மற்றும் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்கள் சந்திப்பில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி இந்த பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் காரணமாக, ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களின் இராஜாங்க அமைச்சர்கள், அவர்களின் செயற்பாடுகளை மேற்பார்வையிட, பதில் அமைச்சர்கள் பலரை நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார பதில் பாதுகாப்பு அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகளின் பதில் அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.