வீதி பாதுகாப்பு உலகத்தொடர் : இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை!

0
131
Article Top Ad

வீதி பாதுகாப்பு உலகத் ரி-20 தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இலங்கை ஜாம்பவான் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ராய்பூரில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், இலங்கை ஜாம்பவான் அணியும் மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஜாம்பவான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்சமாக இசாம் ஜெயரத்ன 31 ஓட்டங்களையும் சனத் ஜெயசூரிய 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் அணியின் பந்துவீச்சில், சாண்டோகி மற்றும் பிஷோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் டெரன் பவல், ஜெரோம் டெய்லர், டுவைன் ஸ்மித் மற்றும் பென் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 173 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், இலங்கை ஜாம்பவான் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நார்சிங் டியோனரின் 63 ஓட்டங்களையும் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை ஜாம்பவான் அணியின் பந்துவீச்சில், நுவான் குலசேகர மற்றும் சனத் ஜெயசூரிய ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் இசுரு உதான, டில்சான் மற்றும் அசேல குணரதன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை ஜாம்பவான் அணியின் நுவான் குலசேகர தெரிவுசெய்யப்பட்டார்.