சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டம் இன்று முதல் அமல்

0
83
Article Top Ad

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டம் (SSCL) இன்று முதல் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.

இம்மாதத் தொடக்கத்தில், சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிச்சட்டம் திருத்தங்கள் மற்றும் 81 பெரும்பான்மை வாக்குகளுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடந்த வாரம் (21) சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிச்சட்டமூலத்துக்கு அங்கீகாரம் வழங்கினார்.

அரசாங்க வருவாயை உயர்த்துவதற்கும், கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் ஒரு நடவடிக்கையாக 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு – செலவு திட்டத்தில் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியை ஆரசாங்கம் அறிமுகப்படுத்தியது.

இந்த வரி இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மீது ஆண்டு வருமானம் தாக்கம் செலுத்தும். 120 பில்லியன் ரூபாவை இந்த வரி மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டமாக இந்த சட்டமூலம் அமுலுக்கு வரும் நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.