உலக சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்று

0
77
Article Top Ad

உலக ரீதியில் சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்று (01) அனுஷ்டிக்கப்படுகிறது.

சிறுவர்களுக்கு இடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதை நோக்காக கொண்டு 14.12.1954 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு அமைய ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

அன்று தொடங்கி இன்று வரை உலகம் முழுவதிலும் ஒக்டோபர் 01 ஆம் திகதி சிறுவர்களுக்குரிய தினமாக கொண்டாடப்படுகிறது.

இதேவ‍ேளை இன்று உலக முதியோர் தினமும் கொண்டாடப்படுகிறது.

1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே இந்தத் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதியோர்களாக கருதப்படுகின்றனர்.

முதியோர்களும் தமது காலத்தில் குழந்தைகள் சிறுவர்கள் போல் உள்ளதாலோ என்னவோ இந்த இரு தினங்களும் ஒரே நாளில் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.