உலக உணவுத் திட்டத்தால் (WFP) உணவுப் பாதுகாப்பின்மை அதிகரித்து வரும் 48 நாடுகளில் இலங்கை ஒரு நாடு என பெயரிடப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகிரம் 2018ஆம் ஆண்டு முதல் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரித்துவரும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் ஒரு முக்கிய நாடாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
கொரோனா மற்றும் உக்ரைனில் நடந்துவரும் போர் நிலைமை இந்த விடயத்தை மேலும் உக்கிரப்படுத்தியுள்ளது. இது உணவு மற்றும் உரங்களின் விலைகளை அதிகரிக்க செய்துள்ளது.
இறக்குமதியாளர்களைப் பாதித்ததுடன் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை விதிக்க பல நாடுகளைத் தூண்டியுள்ளது.
இதன் விளைவாக முன்னோடியில்லாத வகையில் 345 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்கள் ஆபத்தில் உள்ளன. உலக உணவுத் திட்டத்தின்படி, உலகெங்கிலும் 828 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒவ்வொரு இரவும் பசியுடன் படுக்கைக்குச் செல்கிறார்கள்.