கோதுமை மாவின் விலையை குறைக்க நடவடிக்கை!

0
20
Article Top Ad

கோதுமை மாவின் விலை எதிர்வரும் வாரத்தில் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், கோதுமை மாவின் விலை 250 ரூபாவாக குறைக்கப்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா இந்த வாரத்தில் இருந்து தொடர்ந்தும் நாட்டிற்கு கிடைக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், கொழும்பு துறைமுகத்தில் ஏற்கனவே 100 கொள்கலன் கோதுமை மா இறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டுபாய் மற்றும் துருக்கியில் இருந்து இலங்கைக்கு கோதுமை மா இறக்குமதி செய்யப்படுவதாகவும், கடந்த காலங்களில் கப்பல்கள் வருவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கோதுமை மாவின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.