உடவலவ பிரதேசமும் போராட்ட களமாக மாறுவதற்கான அறிகுறிகள்

0
116
Article Top Ad
சுற்றுச்சூழலுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர்கள் இருவரை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் அப்பகுதி போராட்ட பூமியாக மாற வாய்ப்புள்ளதாக இளைஞர் அமைப்பு ஒன்று எச்சரித்துள்ளனர்.

“எனவே, கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்களை விடுவிக்க வேண்டும் என்ற செய்தியை நாங்கள் கொடுக்கிறோம். இல்லையென்றால் அந்த இடம் மீண்டும் போராட்ட பூமியாக மாறுவதை தடுக்க முடியாது என்ற செய்தியை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கடுமையாக கூறுகிறோம். ”

மாற்றத்திற்கான இளைஞர்கள் அமைப்பின் தேசிய அமைப்பாளர் லஹிரு வீரசேகர, ஒக்டோபர் 3ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள தொழிற்சாலைக்கு சீமெந்து உற்பத்தி செய்வதற்காக உடவலவ சங்கபால கல்பொக்க நீர்நிலையின் ஒரு பகுதியில் கல்சியம் சிலிக்கேட் கனிம பாறைகளை அகழ்வு செய்யும் நிறுவனத்தின் முயற்சிகள் பிரதேசவாசிகளின் கடும் எதிர்ப்பினால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக லஹிரு வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் கடந்த நாட்களில் லங்வா நிறுவன அதிகாரிகள் புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரிகளுடன் மாதிரிகளை பெற்றுக்கொள்ள குறித்த இடத்திற்கு வந்தபோது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

“கல்பொக்க மலைத்தொடரைக் காப்பாற்றும் மக்கள் இயக்கத்தின் செயற்பாட்டாளர்களான நிமல் மற்றும் பியதிலக ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.”

கல்பொக்க மலைத்தொடரை காப்பாற்றும் மக்கள் இயக்கம் அப்பிரதேச மக்களின் மாத்திரம் ஒன்றிணைந்த அமைப்பல்ல என்பதை வலியுறுத்தும் லஹிரு விரசேகர, அரசாங்கம் சுற்றாடல் அழிவில் ஈடுபடத் தயாரானால் நாட்டு மக்கள் அதற்கு எதிராக எழுந்து நிற்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

“இப்போது போராட்டம் செய்த நல்ல விடயம் என்னவென்றால், ஒட்டுமொத்த நாட்டையும் ஒரே நேரத்தில் விழித்துக்கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளது.”