புதிய தீர்மானத்துக்கு இலங்கை எதிர்ப்பு!

0
62
Article Top Ad

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான புதிய தீர்மானத்தை இலங்கையின் அனுமதியோ அல்லது ஆலோசனையோ இன்றி முன்வைத்துள்ளதை இலங்கை திட்டவட்டமாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இன்று (ஒக்டோபர் 06) ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) உரையாற்றிய அமைச்சர் இந்த தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்த புதிய தீர்மானம், 30 நாடுகளின் ஆதரவுடன், ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பிலான வரைவுத் தீர்மானம் ஆரம்பத்தில் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, மலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா உள்ளிட்ட நாடுகளின் குழுவினால் அனுசரணையளிக்கப்பட்டது.

அல்பேனியா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா, செக்கியா, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, லாட்வியா, லிச்சென்ஸ்டீன், லிதுவேனியா, லக்சம்பர்க், மார்ஷல் தீவுகள், நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, ஸ்லோவாக்கியா மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளன.