டி20 மகளிர் ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 122 ஓட்டங்களைப் பெற்றது.
அதிகபட்சமாக ஹர்ஷித சமரவிக்ரம 35 ஓட்டங்களையும், அனுஷ்கா சஞ்சீவனி 26 ஓட்டங்களையும், நிலக்ஷி டி சில்வா மற்றும் ஹசினி பெரேரா ஆகியோர் தலா 14 மற்றும் 13 ஓட்டங்களையும் பெற்றனர்.
பாகிஸ்தான் தரப்பில் நஷ்ரா சந்து 3 விக்கெட்டுகளையும், சாடியா இக்பால், நிடா தார், அய்மான் அன்வர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
122 என்ற வெற்றி இலக்கை துரத்திய பாகிஸ்தான் மகளிர் அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக பிஸ்மா மரூப் 42 ரன்களும், நிடா தார் 26 ரன்களும், முனீபா அலி 18 ரன்களும், ஒமைமா சொஹைல் 10 ரன்களும் எடுத்தனர்.
இலங்கை தரப்பில் இனோகா ரணவீர 2 விக்கெட்டுகளையும், சுகந்திகா குமாரி மற்றும் கவிஷா தில்ஹாரி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
15 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் மகளிர் டி20 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை இந்தியாவை எதிர்கொள்கிறது.