கொழும்பு தாமரை கோபுரம் திறக்கும் நேரம் நீடிப்பு!

0
234
Article Top Ad

கொழும்பு தாமரைக் கோபுரத்தின் திறப்பு நேரத்தை பொதுமக்களின் பார்வைக்காக நீடிக்க கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, பொதுமக்கள் தாமரை கோபுரத்தை வார நாட்களில் காலை 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பார்வையிடலாம். வார இறுதி நாட்களில் காலை 9.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை பார்வையிடலாம்.

அதன்படி, வார நாட்களில் காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை டிக்கெட்டுகள் வழங்கப்படும். வார இறுதி நாட்களில் காலை 9.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை டிக்கெட் வழங்கப்படும்.

இதற்கிடையில், பாடசாலைகள், முன்பள்ளிகள் போன்றவற்றின் உத்தியோகபூர்வ வருகைகளுக்கு டிக்கெட் மற்றும் நேரங்களை முன்பதிவு செய்ய பின்வரும் தொலைபேசி எண், WhatsApp மற்றும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துமாறு நிறுவனம் கோருகிறது.

074-2019743 (அழைப்பு/ WhatsApp)
011-2421874
info@colombolotustower.lk