பொது தேர்தல் நடைபெறுமா? ரணில் – பசில் அவசர பேச்சு!

0
136
Article Top Ad

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குமிடையில் முக்கிய பேச்சுவார்த்தையொன்று தொலைபேசியூடாக இடம் பெற்றுள்ளதாகவும் பொதுத் தேர்தல் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுத் தேர்தல் நடத்தப்படுமானால் கூட்டணி அமைப்பது எவ்வாறு என்பது தொடர்பில் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையாக இது அமைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தலுக்கான வேட்பு மனுவின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் மற்றும் அதன் தலைவரை விமர்சிப்பதை தவிர்ப்பது, கட்சியை விட்டு எவரும் பொது ஜன பெரமுனவில் வேட்பு மனு பெற்றுக் கொள்வதை தவிர்ப்பது, பொது ஜன பெரமுனவை விமர்சித்து ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் வேட்பு மனுவை பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளோருக்கு வேட்பு மனுவை வழங்காதிருப்பது போன்ற தீர்மானங்கள் இதன் போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தால் அந்தக் கட்சிகளின் உறுப்பினர்களுக்கு வேட்புமனு வழங்குவது கட்சிகளுக்கு வழங்கப்பட்ட கோட்டாவின் அடிப்படையில் மட்டுமானதாக இருக்க வேண்டும் என்றும் இதன் போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.