இலங்கையின் பணவீக்கம் செப்டம்பரில் உயர்வு

0
87
Article Top Ad

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை (DSC) மற்றும் தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு (NCPI) செப்டம்பர் (2022) மாதத்திற்கான பணவீக்க விகிதத்தை வெளியிட்டுள்ளது.

பணவீக்க விகிதம் ஆகஸ்ட் 2022 இல் 70.2% ஆக இருந்து. செப்டம்பர் 2022 இல் 73.7% ஆக அதிகரித்துள்ளது. ஜூலையில், இது 66.7% ஆக பதிவாகியுள்ளது.

அதன்படி, உணவுக் குழுவின் வருடாந்த பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் இல் 84.6% இலிருந்து செப்டம்பரில் 85.8% ஆக அதிகரித்துள்ளது. உணவு அல்லாத வருடாந்த பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 57.1% இலிருந்து செப்டெம்பர் 62.8% ஆக அதிகரித்துள்ளது.