உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் அயர்லாந்து அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் அயர்லாந்து அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் மஹீஷ் திக்ஷன மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.
அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 129 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 15 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 129 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.
துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காமல் குசல் மென்டிஸ் 68 ஓட்டங்களையும், சரித் 31 ஓட்டங்களையும் மற்றும் தனஞ்சன டி சில்வா 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனார்.
அதனடிப்படையில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை அணி அடுத்த போட்டியில் அவுஸ்ரேலியா அணியை சந்திக்கவுள்ளது. அனைத்து விதத்திலும் அவுஸ்ரேலியா அணி பலம்வாந்த அணியாக உள்ளது. என்றாலும் முதல் போட்டியில் நியூஸிலாந்துடன் ஆஸி. அணி தோல்வியையே சந்தித்தது. ஆகவே வெற்றி தெம்பில் இலங்கையும் வெற்றியின் அவசியத்துடன் ஆஸி. அணியும் 25ஆம் திகதி அடுத்த போட்டியில் மோதவுள்ளன.

