பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

0
61
Article Top Ad

பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் சம்மேளனம் (IUSF) இன்று மாலை பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (TID) முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.

IUSF ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு சம்மேளனத்தின் (IUBF) ஒருங்கிணைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுகிறது.

சிறிதம்ம தேரர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சுகவீனமடைந்த தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக IUSF உறுப்பினர்களினால் இந்த எதிர்ப்பு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிறிதம்ம தேரர் மற்றும் வசந்த முதலுக்கே , குணாதிலக ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .