சிறிசுமண தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!

0
77
Article Top Ad

பொரளை சிறிசுமண தேரர் இன்று (நவம்பர் 01) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

திலினி பிரியமாலி செய்ததாக கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொழிலதிபர்கள் மற்றும் விஐபிகளை ஏமாற்றி பல பில்லியன் ரூபா மோசடி செய்ததாக திலினி பிரியமாலி கடந்த அக்டோபர் 06 ஆம்திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதேவேளை, நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி அவரது வர்த்தகப் பங்குதாரராகக் கூறப்படும் இசுரு பண்டாரவும் கைது செய்யப்பட்டார்.

பிரியமாலி, தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் நட்பாகப் பழகி, தனது தொழிலில் முதலீடு செய்வதால் அதிக வருமானம் தருவதாகக் கூறி ஏமாற்றியுள்ளார்.

பிரியாமாலி மீது இதுவரை மொத்தம் 12 புகார்கள் பதியப்பட்டுள்ளன.