பாராளுமன்றத்தில் ஓங்குகிறது ஐதேக பலம்? ரணில் நகர்த்தும் நாய்!

0
83
Article Top Ad

பல அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் (ஐ.தே.க) இணைந்து கொள்வதற்கும், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, வரவு செலவுத் திட்ட உரையின் திகதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் சமகி ஜன பலவேகய (SJB) ஆகியவற்றின் ஏறக்குறைய 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.

மேலும் இது தொடர்பில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள அமைச்சுப் பதவிகள் தொடர்பில் மேலதிக கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

2023ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இரண்டாம் வாசிப்பின் ஆரம்ப உரையை மதியம் 1.30 மணிக்கு ஆற்றவுள்ளார்.