இலங்கையில் இரண்டாவது நபருக்கு குரங்கு அம்மை தொற்று!

0
118
Article Top Ad

ஐக்கிய அரபு இராச்சியத்தின் (யுஏஇ) டுபாயிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அண்மையில் டுபாயில் இருந்து வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் இவர் இரண்டாவது நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

20 வயதான இவர் கடந்த நவம்பர் 01 ஆம் திகதி இலங்கைக்கு திரும்பியுள்ளார்.

இதேவேளை, குரங்கு அம்மை தொற்று உலக நாடுகளில் தொடர்ந்தும் பரவி வரும் ஒரு நோயாக இருப்பதால், வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரக்கூடிய நபர்களுக்கு தொற்று அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.