இலங்கைக்கு டொலர்களின் வருகையில் அதிகரிப்பு!

0
440
Article Top Ad

2021ஆம் ஆண்டு அக்டோபரில் பதிவுசெய்யப்பட்ட வரவுகளை ஒப்பிடுகையில் 2022ஆம் ஆண்டு அக்டோபரில் புலம்பெயர் தொழிலாளர்களால் அனுப்பப்படும் பணம் 12% அதிகரித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

2021 அக்டோபரில் 317.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியிருந்த தொழிலாளர்கள் 2022 அக்டோபரில் 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.

மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களுக்கு தொழிலாளர்கள் அனுப்பும் தொகை 2,929.4 மில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.