ஆப்கானிஸ்தான் – இலங்கை அணிகள் இன்று மோதல்!

0
82
Article Top Ad

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான இன்றைய ஒருநாள் தொடரில் விளையாடும் எதிர்பார்ப்பு மிக்க இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தசுன் சானக தலைமையிலான அணியில், தினேஷ் சந்திமால், துனித் வெல்லாலகே, தனஞ்சய லக்ஷான், அஷேன் பண்டார ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதுதவிர, ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான அணியில் இருந்து அதிரடி துடுப்பாட்ட வீரரான பானுக ராஜபக்ச விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

அவர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க ராஜபக்ச விடுவிக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சமிக்க கருணாரத்ன அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களான பினுர பெனார்ண்டோ, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க ஆகியோர் உபாதைக் காரணமாக தொடரில் இடம்பெறவில்லை.

தசுன் சானக தலைமையிலான அணியில், பெத்தும் நிஸ்ஸங்க, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்க, தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, தனஞ்சய லக்ஷன், கசுன் ராஜித, மகேஷ் தீக்ஷன, பிரமோத் மதுஷான், அசித்த பெர்னாண்டோ, அஷேன் பண்டார, லஹிரு குமார, பானுக ராஜபக்ச ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முதல்முறையாக இலங்கை வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி, முதல்தடவையாக இலங்கை அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதன் முதல் போட்டியே இன்று (வெள்ளிக்கிழமை) கண்டி- பல்லேகல மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.