சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 10.6 மில்லியன் லீற்றர் (9,000 மெட்ரிக் டன்) டீசல் இன்று (நவம்பர் 26) இலங்கைக்கு வந்தடைந்ததாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
டீசல் சரக்குகளை ஏற்றிச் வந்த “சூப்பர் ஈஸ்டர்ன்” என்ற எண்ணெய் கப்பல் இன்று அதிகாலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.
மாதிரி சோதனைக்குப் பிறகு இந்த டீசல் சரக்குகளை இறக்கும் பணி தொடங்கும் என்று சீனத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
மிகவும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தொலைதூரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்களிடையே விநியோகிக்க இந்த டீசல் சரக்கு எரிசக்தி அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்படும்.
இலங்கைக்கான ஆதரவை உறுதிப்படுத்தும் வகையில், சீன அரசாங்கம் கடந்த 5 மாதங்களில் அவசர மனிதாபிமான நன்கொடைகளாக 3 பில்லியன் ரூபா பெறுமதியான 5,500 மெட்ரிக் தொன் அரிசி மற்றும் அத்தியாவசிய மருந்துகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது.