அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபிய வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு!

0
72
Article Top Ad

உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆசிய கண்டத்தில் உள்ள சவுதி அரேபியா யாருமே எதிர் பார்க்காத வகையில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினாவை அதிர்ச்சிகரமாக தோற்கடித்தது. 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருந்தது.

இந்த வெற்றியால் சவுதி அரேபியாவில் மகிழ்ச்சி அலைக் கடல் பொங்கியது. அந்நாட்டு மன்னர் மறுநாள் பொது விடுமுறை அறிவித்தார். இந்த நிலையில் அர்ஜென்டினாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பெற்ற சவுதி அரேபிய கால்பந்து வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என்று அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை ரூ.8.99 கோடி முதல் 10.48 கோடி வரையில் விற்கப்படுகிறது. இது மாதிரியான விலை உயர்ந்த பரிசு வீரர்களுக்கு வழங்கப்படுவது இது முதல் முறையல்ல. 1994-ல் பெல்ஜியத்தை வீழ்த்திய போது இது மாதிரியே கார் பரிசு வழங்கப்பட்டது. சவுதி அரேபியா இன்றைய 2-வது போட்டியில் போலந்தை எதிர் கொள்ளும் இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் வீரர்கள் மேலும் பரிசு மழையில் நனைவார்கள். அந்த நாடும் கால்பந்து வீரர்களை வெகுவாக பாராட்டும்.