உலகின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் சந்தியா எக்னெலிகொட!

0
87
Article Top Ad

பி.பி.சியின் 2022ஆம் ஆண்டுக்கான 100 பெண்கள் என்ற பட்டியலில் இலங்கையின் மனித உரிமை ஆர்வலர் சந்தியா எக்னெலிகொட இடம்பெற்றுள்ளார்.

இது உலகெங்கிலும் உள்ள மிகவும் ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை இராணுவம் பொதுமக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தினார் என்பதன் அடிப்படையில், பிரகீத் எக்னெலிகொட விசாரணை செய்யப்பட்ட நிலையிலேயே, 2010 ஆம் ஆண்டில் காணாமல்போனார்.

அன்றிலிருந்து காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களுக்காக சந்தியா எக்னெலிகொட குரல் கொடுத்து வருகின்றார்.

2017 ஆம் ஆண்டில், அவர் தனது பிரசாரங்கள் மற்றும் ஏனைய பணிகளுக்காக சர்வதேசத்தின் தைரியமான பெண்கள் விருதையும் பெற்றார்.

இரண்டு பிள்ளைகளின் தாயான இவர், தனது கணவர் காணாமல்போனதிலிருந்து, இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது, தமது அன்புக்குரியவர்களை இழந்த ஆயிரக்கணக்கான தாய்மார்கள் மற்றும் மனைவிகளுக்கு உதவி வருகின்றார்.

இந்தநிலையில் சந்தியா எக்னெலிகொட இடம்பெற்றுள்ள 100 பெண்கள் பட்டியலில், யுக்ரைனின் முதல் பெண்மணி, நடிகைகள் பிரியங்கா சோப்ரா, ஈரானிய மலையேறும் பெண்மணி எல்னாஸ் ரெகாபி உட்பட்டவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.