மக்களின் வயிற்றிலடிப்பதன் விளைவை அடுத்தாண்டில் அரசாங்கம் உணரும்

0
578
Article Top Ad

வரவுசெலவுத்திட்டத்தைப் பார்த்தாலே அடக்குமுறை இனிவரும் காலத்தில் மிக மோசமாக இருக்கும் என்று விளங்குகின்றது. பாதுகாப்பிற்கே அதிகளவானநிதியை ஒதுக்கீடு செய்துள்ளனர் எனவே அடக்குமுறை என்பது மிக அதிகமாக இருக்கும்

. ஆனாலும் மக்களாகிய நாங்களும் சும்மா பார்த்துக்கொண்டிருக்கவில்லை மக்களின் வயிற்றை அடிக்கும் ஒரு வரவுசெலவுத்திட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றும் போது அதன் விளைவு அடுத்த வருடம் ( 2023) அரசாங்கத்திற்கே தெரியவரும் என சட்டத்தரணி சுவஸ்திகா அருளிங்கம் தெரிவித்தார்.

இரத்தமலானையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றபோது குளோப் தமிழிற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.