ரணில் – சம்பந்தன் இடையே ஒப்பந்தமா?

0
64
Article Top Ad

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சம்பந்தன் உடன்படிக்கையில் கைச்சாத்திட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகிறது. அவ்வாறு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதன் மூலம் நாட்டில் இன்னொரு பிரச்சினை உருவாகும் அபாயம் உள்ளதாக மஸ்கெலியா பிரதேச சபையின் பிரதி தலைவர் பிரதீபன் கூறுகிறார்.

தமிழ் மக்கள் இந்த நாட்டின் வடக்கு கிழக்கில் மட்டும்தான் வாழ்கிறார்களா?. ரணில் – சம்பந்தன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் மலையகத்திலும் கொழும்பிலும் வாழும் தமிழ் மக்களுக்காக திகம்பரன், ஜீவன் தொண்டமானுடனும் மனோவுடனும் உடன்படிக்கைகள் கைச்சாத்திட வேண்டும் என்கிறார்கள்.

அரசியல் போரினால் செய்ய முடியாததை புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் தமிழ் கூட்டமைப்பு செய்ய முயல்வதால் இவ்வாறான உடன்படிக்கைகளை மேற்கொண்டு மீண்டும் தேவையற்ற பிரச்சினையை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

ஒரே நாட்டில் ஒரே சட்டம் இருக்க வேண்டும். எனவே இந்த கட்சிகளுடன் எந்த உடன்பாடும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.