விடுதலைக்கு அடையாளமாக பார்க்கப்பட்டவர் இன்றோ வேண்டத்தகாதவராக நோக்கப்படுவதேன்?

0
32
Article Top Ad
ஆங் சாங் சூகிக்கு 33 வருடங்கள் ஒட்டுமொத்த சிறைத்தண்டனை விதித்தது மியன்மார்
விடுதலைக்கு அடையாளமாக பார்க்கப்பட்டவர் இன்றோ வேண்டத்தகாதவராக நோக்கப்படுவதேன்?
Aung San Suu Kyi ஆங் சான் சூகி .,மியன்மாரின் (முன்னர் பர்மா) ஸ்தாபகத்தலைவர் ஆங் சானின் இளைய புதல்வி.
சூகி இந்தப் பெயரை சில வருடங்களுக்கு முன்னர் கேட்டால் பெருமதிப்பு உடனே தொற்றிக்கொள்ளும். உன்னத தலைவர் நெலசன் மண்டேலாவிற்கு நிகராக பார்க்கப்பட்டவர் 1991ல் நோபல் பரிசும் பெற்றவர்.
மியன்மார் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான 1988ம் ஆண்டு மக்கள் புரட்சியில் முக்கிய பங்குவகித்ததன் பின்னர் பிரபலமடைந்தார்.
1989ம் ஆண்டுமுதல் 2010ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் ஜனநாயக மனித உரிமைப் போராட்டங்களுக்கு தலைமை வகித்தமைக்காகவும் குறிப்பாக ஆட்சியை புரட்ட சதி செய்தமைக்காகவும் என்று கூறி 15 வருடங்கள் சிறையடைக்கப்பட்டார்.
அன்றேல் வீட்டுச்சிறையில் தனிமைப்படுத்தப்பட்டார்.
அப்போதெல்லாம் ஜனநாயக உலகம் அவரை நினைக்காத நாட்கள் இல்லை. மியன்மாரின் இராணுவ ஜுன்டா ஆட்சியாளர்களை ஜனநாயக பாதைக்கு அழைத்துவருவதில் முக்கிய பங்காற்றினார் சூகி.
2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் மியன்மாரின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரதமர் பதவிக்கு நிகரான State Counsellor of Myanmar அரச ஆலோசகர் பதவியை வகித்தார்.
இந்தக்காலபபகுதியில் மியன்மார் அண்டைய நாடான பங்களாதேஸில் சிறுபான்மையினராக இருந்து மியன்மாருக்கு பாதுகாப்பிற்காக வந்து நாடற்றவர்களாக வாழ்ந்த ரொஹிஞ்ஞா அகதிகளுக்கு எதிராக கடுமையான அடக்குமுறைகளை முடுக்கிவிட்டது.
இதனை இனவழிப்பு ,போர்க்குற்றம் என்று சர்வதேசத்தில் குறிப்பாக மேற்குலகில் பல நாடுகளும் அமைப்புக்களும் குற்றஞ்சாட்டின.
அப்போது ஆங் சாங் சூகி இன அழிப்போ போர்க்குற்றமோ நிகழவில்லை என பலமுறை மியன்மார் படையினருக்காவும் ஆட்சியாளர்கள் சார்பாகவும் கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
இதனை அடுத்து அவருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுன் நோபல் சமாதானப்பரிசையும் பறிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.
மியன்மாரின் பலம் வாய்ந்த இராணுவத்தை இன அழிப்பு மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்களில் இருந்து தனது பதவிக்காலத்தின் போது சர்வதேச அரங்குகளிலும் நீதிக்க்கான சர்வதேச நீதிமன்றத்திலும் காப்பாற்றுவதற்காக அவர்களின் நடவடிக்கைகள் நியாயமானதே என வாதிட்டார்.
ஆனால் காலச்சக்கரம் வெகு சீக்கிரமே பச்சோந்தியாக மாறிய ஆங் சான் சூகி மீது திரும்பியது.
2020ம் ஆண்டு நடைபெற்ற மியன்மார் பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான கட்சி வெற்றிபெற்றது.
இதன் பின்னர் இராணுவ சதிப்புரட்சியை மியன்மார் இராணுவ ஜுன்டா அரங்கேற்றியதையடுத்து 2021ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் சூகி கைதுசெய்யப்பட்டார். இதனையடுத்து நாடுதழுவிய போராட்டங்கள் வெடித்தன.
2021 டிசம்பரில் அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் விதிக்க்பபட்டன.
அந்தக்குற்றங்கள் ஒவ்வொன்றாக விசாரிக்கப்பட்டு அவருக்கு தண்டனைகள் விதிக்க்பபட்டுவந்தன.
அதில் கடைசிக்குற்றமான ஊழல் மோசடிக்குற்றங்களுக்கான தண்டனையை மியன்மார் நீதிமன்றம் இன்று வழங்கியது . 7 வருடங்கள் தண்டனை . இதனையும் கூட்டினால் ஒட்டுமொத்தமாக அவருக்கு 33 வருடங்கள் தண்டனை கிடைத்துள்ளது.
மியன்மாரில் ஜனநாயகத்தை ஏற்படுத்த நீண்டகாலமாக போராடியதும் சிறைத்தண்டனை அனுபவித்ததும் உண்மைதான்.
ஆனால் பதவியில் இருந்தபோது ஒடுக்கப்பட்ட ரொஹிஞ்ஞா இனத்திற்கு எதிராக கட்விழ்த்து விடப்பட்ட இன அழிப்பை தடுத்துநிறுத்தாமல் அதனை நியாயப்படுத்தியமை என்றுமே ஏற்றுக்கொள்ளமுடியாதது.
பல தசாப்தங்கள் இருந்து அவர் மீதான நன்மதிப்பு அவர் ஆட்சியில் இருந்த ஒரு சில ஆண்டுகள் செய்த செயலால் இல்லாமல் போனது.
இன்று அவர் மீது அந்தாட்டு இராணுவத்தினர் பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி அடுக்கடுக்காக தண்டனை கொடுக்கும் போதும் முன்புபோன்று இரங்க மனம் மறுக்கின்றது.
இன அழிப்பையோ போர்க்குற்றத்தையோ நிகழ்த்தும் இராணுவத்திற்கு துணைபோனால் மனித உரிமைகளை மதிக்கின்ற மக்களின் ஆதரவை இழந்துவிட்டார்.