யாழ். வலி. வடக்கு காணி விடுவிப்புக்காக விட்டுக்கொடுப்பின்றி ஒலித்த குரல் ஓய்ந்தது! 

0
68
Article Top Ad
சுமார் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக எந்தவொரு விட்டுக்கொடுப்புமின்றி – சலிக்காமல் போராடிய, வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் (வயது – 77) மாரடைப்பால் உயிரிழந்தார்.

மயிலிட்டியைச் சொந்த இடமாகக்கொண்ட குணபாலசிங்கம், ஒரு சிறந்த புகைப்பக்ட கலைஞர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ‘பழங்காலப் புகைப்படங்களின் திருவிழா 2020’ நிகழ்வில் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.

வலி. வடக்கில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து கடந்த 32 வருட காலங்களுக்கு மேல் வசித்து வரும் நிலையில் தனது கடைசிக் காலம் வரையிலும், அந்த மக்களை சொந்த இடங்களில் மீள் குடியேற்ற வேண்டும் என கோரிக்கையை முன் வைத்துப் போராடி வந்தவராவார்.

மயிலிட்டியைச் சேர்ந்த 700 மீனவ குடும்பங்களும், பலாலியைச் சேர்ந்த 2 ஆயிரம் குடும்பங்களும் மீள்குடியேற்றத்துக்காகக் காத்திருக்கின்றன எனவும், நாங்கள் உயிர் பிழைப்பதற்காக இந்த நிலங்களை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் போராடி வந்த குணபாலசிங்கம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து, எங்கள் துயரங்களை முன்வைப்பதற்காக வாய்ப்பை வழங்க வேண்டும் என கடந்த ஒக்ரோபர் மாதம் கோரிக்கையை முன்வைத்திருந்தார். அவரது கோரிக்கை நிறைவேறாத நிலையிலையே நேற்று நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார்.