தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டமூலம் மீதான விவாதம் ஒத்திவைக்கப்பட்டது!

0
68
Article Top Ad

பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் குறித்த இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தை ஒரு மாதகாலத்துக்கு ஒத்திவைக்க நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழு தீர்மானித்தது.

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் இன்று (17) நடைபெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் குறித்த இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தை ஒரு மாததத்துக்கு ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், புனர்வாழ்வுப் பணியகம் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு தொடர்பில் முன்வைக்கப்பட்ட திருத்தங்களுக்கு அமைய குறித்த சட்டமூலத்துக்கு குழு அனுமதி வழங்கியது. இதற்கு அமைய புனர்வாழ்வு பணியகம் சட்டமூலம் நாளையதினம் (18) பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இன்றைய கூட்டத்தில் பிரதி சாபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்களான அநுராத ஜயரத்ன, லசந்த அழகியவண்ண, சிசிர ஜயகொடி, ஜகத் புஷ்பகுமார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர குமார திசாநாயக, சந்திம வீரகொடி, (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸ், இரான் விக்ரமரத்ன, வீரசுமன வீரசிங்ஹ, கௌரவ முஜிபுர் ரஹ்மான், (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா, சமிந்த விஜயசிறி, ஜகத் குமார சுமித்திரராய்ச்சி, மஞ்சுளா திசாநாயக, கரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.